கண்கவர் கலைநிகழ்ச்சிகள்... வண்ணமயமாக தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் தொடங்கியது.
கண்கவர் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள் என்று பிரமாண்டமாக விழா நடைபெறுகிறது.
ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டமாக ஸ்டேடியத்திற்குள் கொண்டு வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதும் ஒலிம்பிக் அதிகாரபூர்வமாக தொடங்கியது.
விழாவின் முக்கிய அம்சமாக போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணியினர் தங்களது தேசியக் கொடியுடன் அணிவகுக்க உள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக இந்த முறை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. 68 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட மைதானத்தில் சுமார் 1000 மிக முக்கிய பிரமுகர்கள் விழாவை கண்டுகளிக்கின்றனர்.