23 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்து... ஒலிம்பிக் தொடக்க விழாவின் நிகழ்ச்சி இயக்குனர் பதவி நீக்கம்
ஒலிம்பிக் போட்டிகள் துவங்க சில மணி நேரமே எஞ்சியுள்ள நிலையில், தொடக்க விழாவின் நிகழ்ச்சி இயக்குனர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா நிகழ்ச்சி இயக்குனராக செயல்பட்டு வந்தவர் Kentaro Kobayashi. இவரையே 1998ல் கூறிய கருத்துக்கு தற்போது பதவி நீக்கம் செய்துள்ளனர்.
ஜேர்மனியில் 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியான நாடகம் குறித்து Kentaro Kobayashi கிண்டலாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
23 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பேசிய ஒரு காணொளி தற்போது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ஒலிம்பிக் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
Kentaro Kobayashi பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது தொடர் பில் தீவிர ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.