டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து தாயகம் திரும்பும் போது 2 தமிழக வீராங்கனைகளுக்கு காத்திருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி!
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கச் சென்றுள்ள தமிழக வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகிய இருவருக்கும், தாயகம் திரும்பிய உடன் அரசு வேலை வழங்கப்படவுள்ளது.
32ஆவது ஒலிம்பிக் போட்டி, ஜப்பன் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ஆம் திகதி தொடங்கியது. இதில், இந்தியாவிலிருந்து 127 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுன்னர்.
தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 12 பேர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றனர். இந்த டோக்கியோ ஒலிம்பிக் மூலம், வால் சண்டை பிரிவில் பங்கேற்ற முதல் இந்தியராக, தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி திகழ்ந்தார்.
இவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை. அதேபோல் தமிழர் சரத் கமல், நான்காவது முறையாக ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றார்.
இந்நிலையில், ஏழ்மை நிலையிலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கச் சென்றுள்ள தமிழக வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகிய இருவருக்கும், தாயகம் திரும்பிய உடன் அரசு பணிக்கான ஆணை வழங்கப்படவுள்ளது.
இருவருக்கும் அரசு பணி நியமன ஆணையை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாக, அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.