பாரீஸ் ஒலிம்பிக் விழாவிற்கான மொத்த செலவு எவ்வளவு? வெளிவரும் புதிய தகவல்
பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுகள் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கியிருந்தாலும், மழையால் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திட்டமிட்டதை விடவும் இருமடங்கு
1960 முதல் ஒவ்வொரு ஒலிம்பிக் விழாவும் திட்டமிட்ட தொகையைவிட அதிக செலவை ஏற்படுத்தியதாகவே கூறப்படுகிறது. ஆனால் முதல் முறையாக 2000 ஆண்டு சிட்னி ஒலிம்பிக் விழாவில் இருந்தே, மொத்த செலவும் 10 பில்லியன் டொலருக்குள் இருக்க வேண்டும் என்ற திட்டத்தை வகுத்து, அதன்படியே விழாவை முன்னெடுத்தும் வருகின்றனர்.
2013ல் அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுகளை ஜப்பானில் நடத்த முடிவு செய்யப்பட்ட போது 7.5 பில்லியன் டொலர் தொகை செலவாகும் என்று ஜப்பான் நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால் 2020ல் ஜப்பானில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான மொத்த செலவு 13 பில்லியன் டொலர் என்றே கூறப்பட்டது. அதாவது அவர்கள் 2013ல் திட்டமிட்டதை விடவும் இருமடங்கு தொகை செலவாகியுள்ளது.
நவீன யுகத்தில் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்துவது என்பது அதிக செலவை ஏற்படுத்தும் விடயம் என்பது ஒருபக்கம் இருந்தாலும், சராசரியாக 12 பில்லியன் டொலர் தொகையை செலவிட்டு வருகின்றனர்.
எதிர்பாராத பாரீஸ் காலநிலை
2012ல் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளும் திட்டமிட்ட செலவைவிட 10 மடங்கு அதிகமாக செலவிடப்பட்டதாகவும், மொத்தம் 16 பில்லியன் டொலர் தொகை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.
2016ல் ரியோ ஒலிம்பிக் விளையாட்டுகளுக்காக 12 பில்லியன் டொலர் செலவாகும் என கணிக்கப்பட்ட நிலையில், 20 பில்லியன் டொலர் செலவாகியுள்ளது. தற்போது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான செலவு 10 பில்லியன் டொலர் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் முடிவடைந்த பின்னரே, மொத்த செலவுகள் குறித்த தரவுகள் வெளிவரும். இதனிடையே, எதிர்பாராத பாரீஸ் காலநிலை காரணமாக 50 மில்லியன் டொலர் வரையில் இழப்பை ஏற்படுத்தலாம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |