மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு
இன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் 18-வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஓம் பிர்லா தேர்வு
இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக மக்களவை தலைவருக்கான தேர்தல் இன்று வாக்குப்பதிவு முறையில் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் ஓம் பிரகாஷ் பிர்லாவும், எதிர்க்கட்சிகள் சார்பில் கே. சுரேஷும் போட்டியிட்டனர். இதில், கே.சுரேஷ் 8 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜுன் 24-ம் தேதி கூடிய நாடாளுமன்ற முதல் நாள் கூட்டத்தில் தற்காலிக மக்களவைத் தலைவராக கே.சுரேஷை தேர்ந்தெடுக்காதது தான் எதிர்க்கட்சிகளின் புகாராக இருந்தது.
மேலும், துணை தலைவர் பதவியை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கோரியது. இதில், இருவருக்கும் ஒருமித்த கருத்து வராததால் இப்பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அதிக வாக்குகளை பெற்ற ஓம் பிர்லா 18-வது மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இவர், இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |