ஓமனை ஊதித்தள்ளிய இலங்கை அணி! 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி
உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது.
இலங்கை பந்துவீச்சு தெரிவு
உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஓமன் அணிகள் மோதி வருகின்றன. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை, பந்துவீச்சை தெரிவு செய்ததால் ஓமன் அணி முதலில் துடுப்பாடியது.
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவின் தாக்குதல் பந்துவீச்சில் ஓமன் வீரர் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
Lahiru Kumara takes 3 wickets in a flash!??? #SLvOMA #ReadyToRoar pic.twitter.com/sPm42Sgugh
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 23, 2023
ஹசரங்காவின் மாயாஜாலம்
ஓமன் அணி 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என்று இருந்த நிலையில், ஹசரங்காவின் மாயாஜால பந்துவீச்சில் சரிந்தது. இறுதியில் 30.2 ஓவர்களில் அந்த அணி 98 ஓட்டங்களுக்கு சுருண்டது.
? Wanindu Hasaranga showing his spin wizardry ? with another impressive five-wicket haul!#SLvOMA #CricketGoals #ReadyToRoar pic.twitter.com/vxx4F5QRvB
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 23, 2023
ஹசரங்கா இரண்டாவது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் லஹிரு குமார 3 விக்கெட்டுகளும், ரஜிதா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் திமுத் கருணரத்னே மற்றும் பதும் நிசங்கா கூட்டணி 15 ஓவரில் 100 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தது.
திமுத் 61 (51) ஓட்டங்களும், நிசங்கா 37 (39) ஓட்டங்களும் எடுத்தனர். 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹசரங்கா ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.
??? Sri Lankan bowlers dominate Oman, restricting them to just 98 runs! ?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 23, 2023
Wanindu Hasaranga with another 5-wicket haul ?? and Lahiru Kumara with 3 wickets ?? #SLvOMA #LionsRoar pic.twitter.com/qokO5pigz9
?? Back to back fifties by Dimuth Karunaratne! ??#SLvOMA #CWC23 #LionsRoar pic.twitter.com/MVJ1lJWvrj
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 23, 2023
? Winning by 1️⃣0️⃣ wickets ? with 35 overs to spare! ?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 23, 2023
UAE ✅
Oman ✅#SLvOMA #LionsRoar pic.twitter.com/gtxlnOGOw5
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |