அவுஸ்திரேலியாவை நொறுக்க இதுதான் சிறந்த நேரம் - ஓமன் அணி கேப்டன் தடாலடி
நடப்பு டி20 உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணியை நொறுக்க சரியான நேரம் இது என்று ஓமன் அணித்தலைவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா - ஓமன் மோதல்
2026 டி20 உலகக்கிண்ணத்தில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாமல் அவுஸ்திரேலிய அணி வெளியேறியுள்ளது.
அந்த அணியின் எஞ்சிய கடைசி போட்டி பல்லேகேலேவில் இன்று நடைபெற உள்ளது. இப்போட்டியில் ஓமன் அணியை எதிர்கொள்கிறது அவுஸ்திரேலியா.
இந்நிலையில், ஓமன் அணித்தலைவர் ஜதீந்தர் சிங் (Jatinder Singh) அவுஸ்திரேலிய அணியை எளிதில் வீழ்த்திவிட முடியும் என்று கூறியுள்ளார்.
இதுவே சிறந்த நேரம்
போட்டி குறித்து பேசிய அவர், "நூறு சதவீதம் இது ஒரு நல்ல வாய்ப்பு. எங்களுடைய வீரர்கள் இதை எதிர்நோக்குகிறார்கள். ஏனென்றால், டி20 என்பது வேகத்தையும், தருணங்களையும் கொண்ட விளையாட்டு; அந்த தருணங்களை நீங்கள் சரியாக விளையாடினால், அந்த குறிப்பிட்ட நாளில் நீங்கள் எதையும் செய்ய முடியும்.

அவுஸ்திரேலியா தற்போது சிறப்பாக செயல்படவில்லை; அவர்களை நொறுக்க இதுவே சிறந்த நேரம். எங்கள் வீரர்கள் உண்மையிலேயே நேர்மறை எண்ணத்துடன் உள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தங்கள் முத்திரையைப் பதிக்க அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே, இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளிடம் ஓமன் அணி தோல்விகளை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |