கோவாக்சின் செலுத்தி கொண்ட இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வெளியான முக்கிய அறிவிப்பு
கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் தனிமைப்படுத்தல் தேவையின்றி ஓமானுக்கு பயணம் செய்யலாம் என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தடுப்பூசியான கோவாக்சின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி கொண்டவர்கள் ஓமானுக்கு பயணம் செய்யும் பொழுது தனிமைப்படுத்த தேவையில்லை என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
ஓமானில் பயணம் செய்வதற்கான கோவிட் தடுப்பூசிகள் பட்டியலில் கோவாக்சின் தடுப்பூசியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய தூதரகம் சார்பில் வெளியான அறிக்கையில், ஓமானில் கோவாக்சின் தடுப்பூசியும் அங்கீகரிக்கப்பட்ட வரிசையில் சேர்ந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் இந்த உத்தரவின் படி கோவாக்சின் எடுத்துக் கொண்ட இந்திய மக்களுக்கு ஓமன் பயணத்தை எளிதாக மேற்கொள்ளலாம். அதாவது 14 நாட்களுக்கு முன்னதாகவே கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்தி இருக்க வேண்டும்.
? COVAXIN has now been added to the approved list of #COVID19 vaccines ? for travel to Oman without quarantine. This will facilitate travelers from India vaccinated with COVAXIN.
— India in Oman (Embassy of India, Muscat) (@Indemb_Muscat) October 27, 2021
Please see Press Release ?@PMOIndia@DrSJaishankar @MEAIndia @IndianDiplomacy pic.twitter.com/3lfXPrjHGc
அப்படி இருந்தால் மட்டுமே இந்தியாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் தனிமைப்படுத்தல் தேவையின்றி ஓமனுக்குப் பயணிக்கலாம்.
மேலும், RT-PCR சோதனை போன்ற மற்ற அனைத்து கோவிட்-19 தொடர்பான நிபந்தனைகள் கட்டாயம் பயணிகளுக்குபொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.