தயாராகுங்கள்.. ஒமைக்ரான் பரவும்! பெரும்பாலான நாடுகளுக்கு WHO வலியுறுத்தல்
மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு ஒமைக்ரான் பரவும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் மேற்கு பசிபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய அவசரகால இயக்குனர் டாக்டர் Babatunde Olowokure கூறியதாவது, தற்போது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளதை விட ஒமைக்ரான் பரவியிருக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் மற்றும் பகுதிகளில் ஒமைக்ரான் தொற்று பதிவாகியுள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் போன்ற முன்னுரிமை குழுக்களுக்கு தடுப்பூசி போடுவதை அதிகரிப்பது உட்பட, டெல்டா மாறுபாட்டை எதிர்கொண்டதில் கிடைத்த அனுபவங்களிலிருந்து அரசாங்கங்கள் பாடம் கற்றுக்கொண்டுள்ளன.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, தீவிர கண்காணிப்பை வலுப்படுத்துதல், எல்லைக் கட்டுப்பாட்டுக்கு ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது மற்றும் தேவைப்படுபவர்களுக்கு ICU படுக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற மற்ற நடவடிக்கைகளையும் அமுல்படுத்தலாம் என Babatunde Olowokure தெரிவித்துள்ளார்.