Omicron கொரோனா வைரஸ் இந்த விலங்கிலிருந்து தான் பரவியதா? அறிவியலாளர் முன்வைத்துள்ள கருத்து
Omicron வகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ், கொறிக்கும் வகை பாலூட்டி இனமான விலங்கு ஒன்றிலிருந்து மனிதனுக்கு பரவியிருக்கலாம் என்கிறார் அறிவியலாளர் ஒருவர்.
அதாவது, எலி, hamster போன்ற விலங்குகளிலிருந்து Omicron வகை கொரோனா வைரஸ் மனிதனுக்கு பரவியிருக்கலாம் என்கிறார் கலிபோர்னியாவைச் சேர்ந்த பேராசிரியர் Kristian Andersen என்பவர்.
அறிவியலின்படி, மனிதனும், எலி வகைகளும் குட்டி போட்டு பால் கொடுக்கும் பாலூட்டி வகையைச் சேர்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆக, கொரோனா வைரஸ் தாக்கிய மனிதனிடமிருந்து, இந்த எலி வகை விலங்குகளுக்கு பரவிய கொரோனா வைரஸ்களில் ஒன்று, பல மரபியல் மாற்றங்களை உருவாக்கிக்கொண்டு Omicron வகை கொரோனா வைரஸாக மாற்றம் பெற்றிருக்கலாம் என்கிறார் பேராசிரியர் Kristian.
அதாவது, 2020இல் தோன்றிய ஒரு கொரோனா வைரஸ் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் காணாமல் போயிருக்கிறது. அது இப்போது Omicron வகை கொரோனா வைரஸாக மாறி மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த இரண்டு காலகட்டங்களுக்கும் இடையில் மாயமான அந்த வைரஸ், அந்த கால இடைவெளியில் எலி வகை பாலூட்டிகளுக்குப் பரவி, அவற்றில் உடலில் இருக்கும்போது இந்த புதிய, முன்னெப்போதும் காணப்படாத, 32 வகை மரபணு மாற்றங்களைப் பெற்று, இப்போது Omicron வகை கொரோனா வைரஸாக வெளியே வந்திருக்கிறது என்பது பேராசிரியர் Kristianஉடைய கருத்து.
இரண்டாவதாக, பேராசிரியர் Kristianஉடைய கருத்துக்கு ஆதாரமாக, சில பாலூட்டிகளில் Omicron வைரஸில் காணப்படும் பல மரபணு மாற்றங்கள் காணப்படுவதைக் கூறலாம்.
ஆக, ஒரு கோட்பாட்டின்படி, வௌவால் போன்ற ஒரு பாலூட்டியிலிருந்து மனிதனுக்குப் பரவிய கொரோனா வைரஸ், பின்னர் மனிதனிடமிருந்து மற்ற பாலூட்டிகளாகிய விலங்குகளுக்குப் பரவியிருக்கலாம். டென்மார்க்கில் mink என்ற ஒருவகை பாலூட்டிகளின் உடலில் இந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு அவை கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். தற்போது, கனடாவில் மான் ஒன்றின் உடலிலும் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது, வௌவால் போன்ற ஒரு விலங்கிலிருந்து மனிதனிடம் பரவிய கொரோனா வைரஸ், மீண்டும் மனிதனிடமிருந்து எலி போன்ற விலங்குகளுக்குப் பரவி, அவற்றின் உடலில் வாழும்போது, பல மரபணு மாற்றங்களைப் பெற்று, இப்போது Omicron வகை கொரோனா வைரஸாக வெளியே வந்து, மீண்டும் மனிதனைத் தாக்குவதாக எடுத்துக்கொள்ளலாம் என்பது பேராசிரியர் Kristianஉடைய கருத்து.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022