Omicron மாறுபாடு நேரடியாக நுரையீரலை தாக்குமா? ஆய்வில் வெளியான முக்கிய தகவல்
புதிய வகை Omicron வைரஸ் நுரையீரலை பாதிக்குமா என்பது குறித்து ஆய்வில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து புதிதாக உருமாறிய Omicron வைரஸ் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது.
டெல்டா போன்ற கொரோனா வைரஸ் தொற்றுகளை ஒப்பிடும்போது Omicron பாதிப்பு தன்மை குறைவாக இருந்தாலும் தொற்று பரவும் வீரியம் அதிகமாக இருக்கிறது.
அவ்வப்போது Omicron வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த நிபுணர்கள் Omicron வைரஸ் குறித்து எலி மீது சோதனை நடத்தினர்.
அதில் Omicron தொற்று மூலம் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு, எடை குறைவு மற்றும் இறப்பு விகிதம் போன்றவை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
நுரையீரலின் கீழ்ப்பகுதியில் அதிகமாக பாதிக்காததால் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தாது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் Omicron வைரஸ் நேரடியாக நுரையீரலை பாதிக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.