இது ஆபத்தான வைரஸ்! ஆனால்... ஒமைக்ரான் குறித்து மாடர்னா தலைமை மருத்துவ அதிகாரி நம்பிக்கை
ஓமிக்ரான் 'ஆபத்தான தோற்றமடைய' மாறுபாடு என்று மாடர்னாவின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
மாடர்னாவின் தலைமை மருத்துவ அதிகாரி பால் பர்டன் கூறியதாவது, ஒமைக்ரான் ஒரு ஆபத்தான தோற்றமுடைய மாறுபாடு என்றாலும், அதை எதிர்த்துப் போராடுவதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
பொதுவாக கொரோனா வைரஸைப் பற்றி நாம் நிறைய கற்றுக்கொண்டோம்.
ஒமைக்கரான் ஆபத்தான தோற்றமுடைய வைரஸ், ஆனால் அதை எதிர்த்துப் போராடுவதற்கு இப்போது நம்மிடம் பல கருவிகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன், அதனால் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
அடுத்த இரண்டு வாரங்களில் ஒமைக்ரானுக்கு எதிரான தற்போதைய தடுப்பூசிகளின் செயல்திறனைப் பற்றி ஆராய்ச்சியாளர்களுக்கு தெளிவு கிடைக்கும்.
இருப்பினும், ஒரு புதிய தடுப்பூசி தேவைப்பட்டால், அது பெரிய அளிவில் தயாரிக்கப்பட வேண்டுமென்றால் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடியாது என பர்டன் தெரிவித்துள்ளார்.