Omicron பாதிப்பால் உயிர்பலி அதிகரிக்கலாம்! WHO வெளியிட்ட முக்கிய தகவல்
கொரோனாவில் இருந்து உருமாறிய புதிய வகை Omicron தொற்றால் பல உயிர் இழப்புகள் ஏற்படலாம் என்று உலக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
உலகளவில் Omicron வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் Omicron கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
இதையடுத்து பல நாடுகள் விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஒமைக்ரான் பரவல் நிலைகள் குறித்து அவ்வப்போது புதிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
இதனிடையே Omicron வைரஸ் தொற்றுக்கு உலகின் முதல் பலி இங்கிலாந்தில் நேற்று முன்தினம் பதிவாகி இருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Omicron வகை கொரோனா வைரசால் மருத்துவமனைகள் சேர்க்கப்படும் தொற்று பாதித்தவர்களும், இறப்புகளும் அதிகரிக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதை உலக சுகாதார அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்தாவது, இனி வரும் வாரங்களில் Omicron வைரசின் தீவிரத்தன்மை அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.