Omicron மாறுபாடு ஆபத்தானது அல்ல! அமெரிக்க உயர் விஞ்ஞானி சொல்வது என்ன?
உலக நாடுகளை மிரட்டி வரும் Omicron வைரஸ் குறித்து அமெரிக்காவின் பிரபல விஞ்ஞானி ஒருவர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் Omicron வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஜேர்மனி போன்ற 40க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றது.
சீனாவில் உள்ள வுஹான் நகரில் தோன்றிய கொரோனாவை தொடர்ந்து Omicron மாறுபாடும் மக்கள் மத்தியில் பயங்கர அச்சுறுத்தலாக நிலவி வருகின்றது. கொரோனாவில் இருந்து உருமாறியதால் இதற்கு Omicron என்று உலக சுகாதாரத்துறை பெயர் சூட்டியுள்ளது.
இந்நிலையில், Omicron வைரஸ் குறித்து அமெரிக்காவின் உயர் விஞ்ஞானி Dr Anthony Fauci கூறியதாவது, தென் ஆப்பிரிக்காவில் உருவாகி பல நாடுகளில் பரவி வரும் Omicron வைரஸ் வேகமாக பரவக்கூடியது.
ஆனால் டெல்டாவை விட தீவிரமானது அல்ல. அதிவேகமாக பரவக்கூடிய Omicron வைரஸ் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தாது.
நோயாளிகள் மருத்துவமனையில் அதிகமாக அனுமதிக்கப்பட்டாலும் டெல்டாவை ஒப்பிடும் போது இறப்புகள் குறைவாக தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.