70 மடங்கு வேகமாக பரவும்.. Omicron வைரஸ் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
டெல்டா வைரஸை ஒப்பிடும் போது கொரோனாவில் இருந்து உருமாறிய புதிய வகை Omicron வைரஸ் 70 மடங்கு வேகமாக பரவும் என்று ஆய்வு ஒன்றில் வெளியாகியுள்ளது.
கொரோனாவை தொடர்ந்து Omicron மாறுபாடு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. கொரோனாவில் இருந்து உருமாறிய Omicron, முதலில் தென் ஆப்பிரிக்காவில் தான் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் தற்போது 77க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் பிரபல மருத்துவ வல்லுநர் மைக்கேல் ஜான் சிவாய் தலைமையில் Omicron குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், டெல்டா வைரஸை விட Omicron 70 மடங்கு வேகமாக பரவும். இருந்தாலும், கொரோனாவை போன்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பது கண்டறியப்பட்டுள்ளது. Omicron வைரஸ் ஒரு நபரின் உடலில் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக்கூடும். கொரோனா மற்றும் டெல்டா வைரஸ் முதலில் நுரையீரலை பாதித்து உயிர் இழப்பை ஏற்படுத்தும்.
ஆனால் Omicron அத்தகைய ஆபத்தானது அல்ல. அறிகுறிகள் லேசாக இருக்கும் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்டாவை போல் Omicron அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் நம்பி வருகின்றனர். இருப்பினும் மாஸ்க் மற்றும் தனி மனித இடைவேளை போன்றவற்றை கடைபிடிக்கும் படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.