Omicron வைரஸ் எலிகளில் இருந்து பரவியதா? சீன விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்
சீன ஆய்வாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் Omicron குறித்து சில முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சீனாவின் வுஹான் பகுதியில் உள்ள ஆய்வு கூடத்தில் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் குறித்து ஆராய்ச்சி நடத்தினர். அதில் மனிதர்களிடமிருந்து எலிகளுக்கு பரவியது என்பதற்கு வலுவான சான்றுகள் கிடைத்துள்ளன.
பின்னர் பல பிறழ்வுகளை கடந்து மீண்டும் இது மனிதர்களுக்கு வந்தது என்பது குறிப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து வெளிவந்துள்ள சில விஷயங்கள், முந்தைய நோயாளிகளின் மாதிரிகளில் அரிதாகவே கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களில் Omicron மாறுபாட்டின் ஐந்து பிறழ்வுகள் எலிகளின் நுரையீரல் மாதிரிகளில் காணப்படுவதைப் போலவே இருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது. Omicron தோற்றம் பற்றி பரந்த அளவில் மூன்று கோட்பாடுகள் உள்ளன.
நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபரில் வைரஸ் பிறழ்வு நடக்கிறது என்று ஒரு கருத்து உள்ளது. கோவிட் நோயாளிகளிடையே பிறழ்வு ஏற்படுகிறது.
மூன்றாவது கோட்பாட்டின் படி ஒரு விலங்கு இனம் மனிதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம், அது மனிதர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுவதற்கு முன்பு பல சுற்று பிறழ்வுகளை சந்தித்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.