ஒமிக்ரான் துணை மாறுபாடு குறித்து WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ஒமிக்ரான் துணை மாறுபாடான BA.2-வை அடையாளம் காண்பது கடினம் என உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி கவலை தெரிவித்துள்ளார்.
BA.2 குறித்து உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி டாக்டர் Nicksy Gumede-Moeletsi கூறியதாவது, BA.2 போட்ஸ்வானா, கென்யா, மலாவி, செனகல் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
BA.2-வை அடையாளம் காண்பது கடினமாக உள்ளதால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். WHO, ஆய்வகங்களுடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.
BA.2-யின் பரவலைப் பற்றி துல்லியமாக தெரிந்துக்கொள்வதற்காக, ஒமிக்ரான் என குறிப்பிடப்படாமல் திரும்பி வந்த மாதிரிகளை மேலதிக ஆய்வுக்கு அனுப்புமாறு ஆய்வகங்களிடம் கோரியுள்ளோம்.
ஒமிக்ரானின் BA.1 மாறுாபட்டை முந்தைய மாறுபாடுகளைக் காட்டிலும் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
ஏனென்றால், பொதுவான PCR சோதனையில் பயன்படுத்தப்படும் மூன்று இலக்கு மரபணுக்களில் ஒன்றை BA.1 கொண்டிருக்காது.
இவ்வாறு கண்டறியப்படும் தொற்றுகள் இயல்பாகவே BA.1 ஆல் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.
BA.1 போலவே BA.2 மாறுபாட்டிலும் அதே விடுபட்ட இலக்கு மரபணு இல்லை என உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி டாக்டர் Nicksy Gumede-Moeletsi தெரிவித்துள்ளார்.