பிரித்தானியாவில் ஒமிக்ரானை விட ஆபத்தான வைரஸ்! எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்
ஒமிக்ரான் வைரஸை விட அதன் புதிய துணை திரிபு வைரஸான பிஏ 2 மிகவும் ஆபத்து வாய்ந்தது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த பி.ஏ 2 வைரஸ் ஆனது ஓமிகிரேனை விட வேகமாக பரவும் ஆற்றல் கொண்டது எனவும் எச்சரித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக இந்த கொரோனா வைரஸ் ஆனது உலகம் முழுவதையும் கொடுமைப்படுத்தி வருகிறது. முதல் அலை, இரண்டம் அலை என தொடர்ந்து, தற்போது மூன்றாம் அலை உலகத்தை வலம்வந்து கொண்டிருக்கிறது.
இந்த கொரோன வைரஸ் தனது உருவத்தையும், செயல்திறனையும் மாற்றி மாற்றி உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது ஒமிக்ரான் என்ற கொரோனா வைரஸின் புதிய திரிபான பிஏ2 என்ற வைரஸ் பரவ தொடக்கி உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஒமிக்ரான் வைரஸிடம் இருந்து புதிய திரிபுகளாக பிஏ1, பிஏ2 மற்றும் பிஏ3 தோன்றி உள்ளதாகவும், அதில் பிஏ2 உருமாற்றம் விரைவாகப் பரவுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த புதிய திரிபு பிரித்தானியா, டென்மார்க் ஆகிய நாடுகளை தவிர ஸ்வீடன், நார்வே, இந்தியா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது எனவும், இதுவரை இந்த புதிய திரிபு 40 நாடுகளில் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த புதிய பிஏ2 ஒமிக்ரானை விட அதிக பாதிப்பு ஏற்படுத்தும் வலிமை பெற்றது எனவும், இது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை அதிகம் பாதிக்கும் எனவும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
மூன்றாவது அலையே இன்னும் முடிவடையாத நிலையில் நான்காவது அலையை இந்த பிஏ2 வைரஸானது கொண்டுவரலாம் என எதிர்பார்ப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.