57 நாடுகளில் அதிகமாக பரவக்கூடிய ஓமிக்ரானின் துணை மாறுபாடு கண்டுபிடிப்பு: WHO அதிகாரப்பூர்வ தகவல்
ஓமிக்ரானின் துணை மாறுபாடு 57 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
2021 நவம்பர் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டது.
இதற்கு BA.1 என்று அடையாளம் கொடுக்கப்பட்டது. இப்போது உலகளவில் உள்ள 96% தொற்றுக்கு BA.1, BA.1.1 மாறுபாடுகளே காரணமாக உள்ளன.
ஓமிக்ரான் BA.1, BA.1.1, BA.2 மற்றும் BA.3 என பல துணை மாறுபாடுகளை கொண்டுள்ளது.
ஆனால் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில், BA.2, அசல் மாறுபாடுகளான (BA.1, BA.1.1)-க்குப் போட்டியாக உருவெடுக்கத் தொடங்கி இருக்கிறது.
சில நாடுகளில் பதிவான ஓமிக்ரான் பாதிப்புகளில், பாதிக்கும் மேற்பட்ட பாதிப்புகளுக்கு ‘Stealth’ மாறுபாடு காரணமாக இருக்கிறது.
பல ஆய்வுகள் BA.2 மாறுபாடு BA.1, BA.1.1-ஐ விட அதிகமாக பரவக்கூடியது என்று பரிந்துரைத்துள்ளதாக WHO தெரிவித்துள்ளது.