அதிகரிக்கும் Omicron தொற்று! உலகம் முழுவதும் 11,500 விமானங்கள் ரத்து
ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பால் உலகம் முழுவதும் 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி கடந்த மூன்று நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் 11,500 விமானங்கள் ரத்தாகியுள்ளதாக சர்வதேச விமானப் போக்குவரத்துகளை ஆய்வு செய்யும் ஃப்ளைட் அவேர் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ள விடயங்கள்:
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இதுவரை 11,500 விமானங்கள் ரத்தாகியுள்ளன. திங்களன்று 3,000 விமானங்களும், செவ்வாயன்று 1,100 விமானங்களும் ரத்தாகியுள்ளன.
ஒமைக்ரான் பரவலால் உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சுற்றுலா சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.