முடி வெட்டும் தொழில் செய்த நபர்- தற்போது பல சொகுசு கார்களுக்கு சொந்தக்காரர்; இவரது சொத்து மதிப்பு?
பில்லியனர்கள் பட்டியலில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தப்படியாக இந்தியா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த இந்த கோடீஸ்வரர்கள் செழிப்பான வணிகங்களை நிர்வகிக்கின்றனர்.
இவர்களுடைய வாழ்க்கை முறையும் அதற்கு ஏற்றவாரே இருக்கும். ஆடம்பரமான வீடுகள், விலையுயர்ந்த தனியார் விமானங்கள், செழுமையான படகுகள் விலையுயர்ந்த நகைகள் என வைத்திருப்பார்கள்.
அதில் ஒருவர் தான் முடி வெட்டும் தொழில் செய்து தற்போது பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறார்.
யார் அந்த நபர்?
பெங்களூரை சேர்ந்த ரமேஷ் பாபு ஆரம்பத்தில் முடி வெட்டும் தொழிலை செய்த வந்தார். பல ஆண்டுகளாக நிறைய முயற்சிகளை மேற்கொண்டார்.
மேலும் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்ற தனது தீர்மானத்தில் ஒருபோதும் அசையவில்லை.
கடந்த மூன்று தசாப்தங்களாக, அவர் ஒரு செழிப்பான சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பியுள்ளார்.
இப்போது 400 க்கும் மேற்பட்ட வாகனங்களை சொந்தமாக வைத்திருக்கிறார், இதில் Rolls Royce Ghost, Mercedes maybach மற்றும் பல jaguar, BMW, Audis, Ford Mustang GT போன்ற பல சொகுசு கார்கள் அடங்கும்.
இவர் பெங்களூரில் ஒரு செழிப்பான கார் வாடகை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
1993 இல் அவர் ஒரு மாருதி ஆம்னியை வாங்கி, கூடுதல் பணம் சம்பாதிக்க அதை வாடகைக்கு விடத் தொடங்கினார். இதுவே அந்நிறுவனத்தின் ஆரம்பக்கட்டமாகும்.
தற்போது, அவர் பல உயர்தர கார்களை வைத்திருக்கிறார். மேலும் அவரது வாடிக்கையாளர்களில் அமிதாப் பச்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்களும் உள்ளனர்.
தனது குடும்பத்தை சரியாக பார்த்துக்கொள்வதற்காக ரமேஷ் பாபு 13 வயதில் செய்தித்தாள்களை விநியோகிப்பது மற்றும் பால் வழங்குவது உட்பட பல வேலைகளைச் செய்யத் தொடங்கினார்.
படிப்பில் கவனம் செலுத்தும் அதே வேளையில், அவர் தனது தந்தையின் சலூனையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
இவர் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட பதினாறு மணிநேரம் வேலை செய்து, அதில் இரவு தாமதமாக தனது தந்தையின் கடையை நிர்வகிப்பது மற்றும் காலையில் கல்வி பயில்வதற்கு செல்வது என தனது வாழ்க்கையை கொண்டு சென்றுள்ளார்.
அவரது மாமாவின் உதவியுடன், ரமேஷ் பாபு தனது தந்தையின் சலூனை சீரமைத்து நல்ல நிலைக்கு கொண்டு சென்றார்.
காரை வாடகைக்கு விட்டு கூடுதல் பணம் சம்பாதித்தார். அவரது பணப்புழக்கம் மேம்பட்டதால் அவர் தனது வாடகைக் கார்களில் மேலும் கார்களை வாங்கினார்.
முதலில் தானே காரை அவரே ஓட்டி வந்தார். வியாபாரம் பெருகியதால், அதிக ஓட்டுனர்களை வேலைக்கு அமர்த்தினார்.
இவர் தனது முதல் சொகுசு காரான மெர்சிடிஸ் mercedes benz c class காரை 2004 ஆம் ஆண்டு கிட்டதட்ட ரூ.38 லட்சத்திற்கு வாங்கினார்.
அடுத்த சில ஆண்டுகளில் பல செழுமையான கார்களை வாங்கியதன் மூலம் வியாபாரத்தை உயர்த்தினார்.
சொத்து மதிப்பு?
அவர் தனது நிறுவனமான Ramesh Tours & Travels பயன்படுத்தி இந்த கார்களை நன்கு அறியப்பட்ட நபர்கள் மற்றும் பிரபலங்களுக்கு குத்தகைக்கு விட்டதாகவும் கூறப்படுகிறது.
செழிப்பான சொகுசு வாகனங்கள் தவிர, ரமேஷ் பாபுவின் சேகரிப்பில் மலிவு விலையில் கார்கள், வேன்கள், மினிபஸ்கள் மற்றும் சில வானகங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இவருடைய நிகர மதிப்பு சுமார் 1,200 கோடி ரூபாய் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |