சாலையில் புத்தகம் விற்றவர்... இன்று வெளிநாட்டில் கோடீஸ்வர இந்தியர்: வாயைப் பிளக்கவைக்கும் சொத்து மதிப்பு
பொருளாதர பின்னணி ஏதுமின்றி, கடின உழைப்பால் உயரங்கள் தொட்ட பல தொழிலதிபர்கள் வரிசையில் ரிஸ்வான் சாஜன் என்பவரும் ஒருவர்.
கோடீஸ்வர இந்தியர்களில் ஒருவர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செயல்படும் Danube குழுமத்தின் தலைவர் ரிஸ்வான் சாஜன், ஒரு காலத்தில் பிழைப்புக்காக சாலைகளில் புத்தகங்களை விற்பனை செய்தவர்.
தற்போது துபாய் மாகாணத்தில் கோடீஸ்வர இந்தியர்களில் ஒருவர். இவரது Danube நிறுவனம் பில்லியன் டொலர் குழுமமாகும். உலகளவில் பல்வகைப்பட்ட கிளைகளைக் கொண்ட மிகப்பெரிய கட்டுமானப் பொருட்கள் நிறுவனங்களில் ஒன்று.
ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் இந்தியாவில் கிளைகள் பரப்பி செயல்பட்டு வருகிறது Danube குழுமம். மும்பையில் ஒரு மத்திய தர குடும்பத்தில் பிறந்தவர் சாஜன்.
தமது குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு பட்டாசு விற்பனை மற்றும் சாலைகளில் புத்தக விற்பனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டதுடன், வீடு தோறும் பால் விநியோகத்திலும் ஈடுபட்டார்.
வளைகுடா போர் காரணமாக
16 வயதில் தமது தந்தையை இழந்த சாஜன், 1981ல் குவைத்தில் உள்ள தமது உறவினரின் கட்டுமானப் பொருட்கள் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். படிப்படியாக அந்த துறையில் சாதித்து வந்த நிலையில், 1991 வளைகுடா போர் காரணமாக இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனால் 1993ல் Danube குழுமத்தை நிறுவினார் சாஜன். தற்போது இந்த நிறுவனமானது கட்டுமானப் பொருட்கள் விற்பனை, குடியிருப்புகளின் உள் அலங்காரங்களையும் முன்னெடுப்பதுடன், கட்டுமான நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது.
2019ல் Danube குழுமத்தின் மொத்த வருவாய் என்பது 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. சாஜனின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது இந்திய மதிப்பில் சுமார் ரூ 20,830 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |