பேருந்துக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு: தப்பிச்சென்ற நபர் கைது!
அமெரிக்காவின், வடக்கு கலிஃபோர்னியாவில் பேருந்துக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கியால் சுட்டுவிட்டு வால்மார்ட்க்குள் தப்பிச்சென்ற நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
ஒரோவில்லே பகுதியில் உள்ள அம்பம் என்ற பல்பொருள் அங்காடிக்கு எதிர்புறம் நின்ற grayhound என்ற பேருந்தில் துப்பாக்கியால் சுடப்படுவதாக இரவு 7 :30 மணியளவில் 911 என்ற காவல்துறை உதவி அலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை பார்த்தப் போது பேருந்தில் ஒருவர் சுடப்பட்டு இறந்தும்,சிலர் படுகாயங்களுடனும் இருப்பதை கண்டுள்ளனர். ஆனால் அவர்களை சுட்ட நபர் பொலிசார் வருவதை உணர்ந்து தப்பிஓடிவிட்டான்.
ஆனால் பொலிசார் 911 அழைப்பில் சொன்ன அடையாளங்களை வைத்து வால்மார்ட்க்குள் தப்பிச்சென்ற நபரை கைது செய்தனர். சுடப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மற்றும் நிலைமை சரியாக அறிவிக்கப்படாத நிலையில், ஒரோவில்லே மேயர் Chuck Reynolds ஒருவர் இறந்துள்ளதாகவும், 5 பேர் காயம் அடைத்து இருப்பதாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த துப்பாக்கி சுட்டிற்கான காரணம் தற்போது தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது