ஒரு நிஜ வாழ்க்கை நண்பர் கூட இல்லை; சமூக ஊடகங்களில் வாழ்க்கையை தொலைத்துவரும் பிரித்தானியர்கள்
மில்லியன் கணக்கான பிரித்தானிய மக்கள் தங்கள் வாழக்கையை இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் தொலைத்துவருகின்றனர்.
ஒரு நண்பர் கூட இல்லை
கிட்டத்தட்ட 10 பிரித்தானியர்களில் ஒருவர் தங்களுக்கு ஒரு நிஜ வாழ்க்கை நண்பர் கூட இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் வாழ்க்கை சமூக ஊடகங்களிலும் ஆன்லைன் கேமிங்கிலும் செலவிடப்படுவதாக கூறுகின்றனர்.
கோடிக்கணக்கான பிரித்தானிய மக்களுக்கு 'நிஜ வாழ்க்கை' நண்பர்கள் இல்லை என்று 3,000 பேர் கொண்ட கருத்துக்கணிப்பு காட்டுகிறது.
Shutterstock/Eva Blanco
'ஆன்லைன்' நண்பர்கள்
அதற்கு பதிலாக, 18 முதல் 70 வயதுக்குட்பட்ட எட்டு சதவீத பிரித்தானியர்கள் இணையத்தில் இருந்து அனைத்து சமூக தொடர்புகளையும் பெறுகிறார்கள் என இந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
சுமார் 4.4 மில்லியன் பிரித்தானிய மக்களுக்கு அவர்கள் நம்பக்கூடிய ஒரு உண்மையான நண்பர் கூட இல்லை.
நிஜ வாழ்க்கையில் நண்பர்கள் இல்லை என கூறும் பிரித்தானியர்கள் அதற்குப் பதிலாக, தங்களுக்கு 'ஆன்லைன்' நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களை சமூக ஊடகங்கள், ஆன்லைன் கேம்கள் அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்வதாகவும் கூறுகினறனர்.
Getty Images/RooM RF
அதேநேரம், ஆயுள் காப்பீட்டு நிபுணர்களான LifeSearch நடத்திய ஆய்வில், நண்பர்களைக் கொண்ட மீதமுள்ள 92 சதவீதம் பேர் சராசரியாக தலா எட்டு நண்பர்களைக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
அவர்களில் ஆண்களுக்கு சராசரியாக ஒன்பது நண்பர்கள் இருப்பதாகவும், பெண்களுக்கு சராசரியாக ஏழு பேர் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு காட்டுகிறது.
சராசரியாக பத்து நண்பர்களைக் கொண்ட 35 வயதிற்குட்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில், 35-54 வயதுடையவர்கள் குறைந்த உண்மையான நண்பர்களைக் கொண்டுள்ளனர், அவர்கள் சரசியாக ஏழு நண்பர்களை கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |