பிரித்தானியாவில் ஐந்தில் ஒருவர்... புதிய ஆய்வறிக்கையால் உருவாகியுள்ள சிக்கல்
பிரித்தானியாவில் ஐந்து பேரில் ஒருவர் தற்போது யூத எதிர்ப்பாளர்களாக உள்ளனர் என புதிய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
பிரித்தானிய மக்கள்
பிரித்தானியாவில் யூத எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை வெறும் ஐந்து ஆண்டுகளில் இரு மடங்கானதாகவும் தெரிய வந்துள்ளது. 2024ல் பிரித்தானிய மக்களில் 16 சதவீதம் பேர்கள் யூத எதிர்ப்பாளர்களாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 21 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஆனால் 2021ல் இந்த எண்ணிக்கை வெறும் 11 சதவீதமாகவே இருந்துள்ளது. மட்டுமின்றி, நாஜிக்கள் யூதர்களை நடத்தியது போல இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை நடத்துகிறது என்று 45 சதவீத பிரித்தானிய மக்கள் நம்புகிறார்கள் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 33 சதவீதமாக இருந்துள்ளது. மேலும், இளைஞர்களில் 60 சதவீதத்தினரும் லண்டன் மக்களில் 48 சதவீதத்தினரும் இதை நம்புகின்றனர்.

பிரித்தானிய அரச குடும்பத்தில் கோவிட் தடுப்பூசியால் புற்றுநோய்: அமெரிக்க மருத்துவரால் வெடித்த சர்ச்சை
இது அக்டோபர் 7 தாக்குதலை அடுத்து, பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் கொடூர இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்தே, பிரித்தானிய மக்களின் மன நிலை மாறியுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில், ஆயிரக்கணக்கான யூத சமூகத்தினரும் ஆதரவாளர்களும் இன்று பிற்பகல் பிரித்தானியாவின் யூத எதிர்ப்புக்கு எதிரான அணிவகுப்பில் சேர தயாராகி வருகின்றனர்.
இன்று மதியம் 1 மணியளவில் பேரணி தொடங்கும் என்றே கூறபப்டுகிறது. மேலும், 18 முதல் 24 வயதுடைய பிரித்தானிய இளையோர், இஸ்ரேல் ஆதரவாளர்களுடன் நேரம் செலவிட தயங்குவதாகவும், இது 49 சதவீதம் என்றும் தெரிய வந்துள்ளது.
ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதால்
ஆனால் 18 சதவீத இளையோர் மட்டுமே, இஸ்ரேல் ஆதரவாளர்களுடன் நேரம் செலவிடுவதில் தவறில்லை என குறிப்பிட்டுள்ளனர். வெறும் 31 சதவீத இளம் வாக்காளர்களே, யூத மக்களுக்கான ஒரு நாடாக இஸ்ரேல் அறியப்பட உரிமை உள்ளதாக ஆதரிக்கின்றனர்.
ஆனால் 20 சதவீதம் இளைஞர்கள், தேவையில்லை என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய ஆதரவாளர்கள் பெரும்பாலான ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதால், நெதன்யாகு அரசாங்கம் எந்தக் கொடூரத்தையும் முன்னெடுக்கும் என 26 சதவீத பிரித்தானிய மக்கள் நம்புகின்றனர்.
இதில், இளைஞர்கள் 42 சதவீதம் பேர்கள் இஸ்ரேலின் கொடூரங்களை ஊடகங்கள் மறைப்பதாக பதிவு செய்துள்ளனர். 10 சதவீத பிரித்தானிய இளைஞர்கள் ஹமாஸ் ஆதரவு நிலையை பதிவு செய்துள்ளனர்.
ஹமாஸ் படைகளை பயங்கரவாத அமைப்பு என அடையாளப்படுத்துவது தவறு என 14 சதவீத இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, 19 சதவீத இளைஞர்கள் அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலை ஆதரிப்பதுடன், அது முறையே என்றும் வாதிட்டுள்ளனர்.
பிரித்தானிய மக்களில் 29 சதவீதம் பேர் இஸ்ரேலும் அதன் ஆதரவாளர்களும் நமது ஜனநாயகத்தில் மோசமான செல்வாக்கு செலுத்துவதாக நம்புகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |