புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பும் திட்டம்: இரண்டாவது விமானமும் வெறுமையாக புறப்பட்டது
திங்கட்கிழமை, One in, one out திட்டத்தின்கீழ், பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் புலம்பெயர்ந்தோர் சிலருக்கான இருக்கைகளை பிரித்தானிய உள்துறை அலுவலகம் முன்பதிவு செய்திருந்தது.
அந்த புலம்பெயர்ந்தோர் விமானத்தில் தங்களுக்கான இருக்கைகளில் அமரவைக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர்கள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டார்கள்.
புலம்பெயர்ந்தோர் இல்லாமலே புறப்பட்ட விமானம்
அவர்களை பிரான்சுக்கு திருப்பி அனுப்ப சட்டப்படி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் பிரான்சுக்கு அனுப்பப்படவில்லை.
ஆகவே, புலம்பெயர்ந்தோரை ஏற்றிக்கொண்டு பிரான்சுக்குச் செல்லவேண்டிய விமானம், அவர்கள் இல்லாமலேயே பிரான்சுக்கு புறப்பட்டது.
புலம்பெயர்ந்தோர் இல்லாமலே புறப்பட்ட இரண்டாவது விமானம்
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை One in, one out திட்டத்தின்கீழ் புலம்பெயர்ந்தோரை ஏற்றிக்கொண்டு பிரான்சுக்குச் செல்லவேண்டிய விமானத்திலும் புலம்பெயர்ந்தோர் யாரும் இல்லை என தி சன் பத்திரிகை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆக, புலம்பெயர்ந்தோரை ஏற்றிக்கொண்டு பிரான்சுக்குச் செல்லவேண்டிய இரண்டாவது விமானமும், புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சென்ற மாதம் சிறுபடகு மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்த எரித்ரியா நாட்டவரான 25 வயது இளைஞர் ஒருவரை இன்று காலை 9.00 மணிக்கு பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், அவரை பிரான்சுக்கு அனுப்பினால் அவர் பயங்கர வறுமையில் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததையடுத்து அவர் பிரான்சுக்கு அனுப்பப்படுவதும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை பிரான்சிலிருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் சிறுபடகுகள் மூலம் நுழைந்தவர்கள் எண்ணிக்கை 31,026.
ஆனால், One in, one out திட்டத்தின்கீழ் பிரித்தானியாவிலிருந்து சுமார் 100 புலம்பெயர்ந்தோர் மட்டுமே பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அத்திட்டம் பலனளிக்குமா என கேள்வி எழுந்துள்ளதை மறுப்பதற்கில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |