One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம்
One in, one out திட்டம் முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது.
ஆம், புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்குத் திருப்பி அனுப்புவதற்காக பிரித்தானியாவிலிருந்து புறப்பட்ட விமானம், புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம்
நேற்று திங்கட்கிழமை, ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து பாரீஸ் புறப்பட தயாராகிக்கொண்டிருந்திருக்கிறது.
அதில், One in, one out திட்டத்தின்கீழ், பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் புலம்பெயர்ந்தோர் சிலருக்கான இருக்கைகளை பிரித்தானிய உள்துறை அலுவலகம் முன்பதிவு செய்திருந்தது.
அந்த புலம்பெயர்ந்தோர் விமானத்தில் தங்களுக்கான இருக்கைகளில் அமரவைக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர்கள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதாவது, அவர்களை பிரான்சுக்கு திருப்பி அனுப்ப சட்டப்படி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று அவர்கள் பிரான்சுக்கு அனுப்பப்படவில்லை.
ஆகவே, புலம்பெயர்ந்தோரை ஏற்றிக்கொண்டு பிரான்சுக்குச் செல்லவேண்டிய விமானம், அவர்கள் இல்லாமலேயே பிரான்சுக்கு புறப்பட்டுள்ளது.
ஏற்கனவே One in, one out திட்டம் எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பது குறித்து பிரித்தானிய அரசியல்வாதிகள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ள நிலையில், அத்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்ட முதல் பயணமே தோல்வியில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |