உக்ரைன் போரில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொலை!
உக்ரைனில் நடந்து வரும் போரில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 6வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், இந்தியர்கள் கீயவை விட்டு இன்றே வெளியேற தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் இன்று அவசரமாக கீயவ் விட்டு வெளியேறுமாறு உக்ரேனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனில் நடந்து வரும் போரில் இந்தியா மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், பலியான மாணவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உக்ரைனின் மேற்கு எல்லையை அடைவதற்காக Lviv நகருக்குப் செல்வதற்காக ரயில் நிலையத்திற்குப் புறப்பட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
கார்கிவ் நகரில் உள்ள மாணவர்கள் தற்போது இந்திய தூதரகத்தின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், கார்கிவ் நகரில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க, சென்னையில் உள்ள பெற்றோர்கள் ரஷ்ய தூதரகத்தின் உதவியை நாடியுள்ளனர்.
கார்கிவ் நகரத்திலிருந்து ரஷ்யா 30 கிமீ தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.