கடைசியாக ஒரு முறை ப்ளீஸ்...மணமேடையில் முன்னாள் காதலனை கட்டிப் பிடித்த மணமகள்! கமெராவில் சிக்கிய அந்த காட்சி
மலேசியாவில் மணமேடையில், மணமகள் தன்னுடைய முன்னாள் காதலனை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய வீடியோ சமூகவலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகிறது.
சமூகவலைத்தளமான டிக்டாக்கில் @mayangkumay என அழைக்கப்படும் அந்த பெண் குறித்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.
அதில், திருமண வரவேற்பில் உறவினர்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்து செல்கின்றனர். அப்போது ஒரு நபர் மணமகளை வாழ்த்த செல்லும் போது, உடனே மணமகள், தன்னுடைய கணவனிடம் கடைசியாக இன்னும் ஒரு முறை இவரை கட்டியணைத்து கொள்கிறேன், முன்னாள் காதலன் என்று ஒரு வேதனை கலந்து சிர்ப்புடன் கேட்கிறார்.
இதற்கு அவருடன் ஒன்றும் சொல்லாமல் இருக்க, அதன் பின் கட்டியணைத்து கொள்ள, அந்த முன்னாள் காதலன், அதைத் தொடர்ந்து மணமகனின் கையைப் பிடித்து நன்றி சொல்வது போல் இருக்கிறார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. சுமார் 5.5 மில்லியனுக்கு மேற்பட்டோர் பார்த்துவிட்டனர்.
இதில் இணையவாசி ஒருவர், மனைவியை முன்னாள் காதலன் கட்டிப்பிடிப்பதை பார்க்கும் போது, அவர் உடனே கீழே குணிவதை பார்க்க முடிகிறது, மணமகனின் குடும்பத்தினர் இதைக் கண்டால் என்ன நினைப்பார்கள்.
மணமகனின் முகம் வலிக்கிறது, அவர் பொய்யாக நடிக்கிறார் என்று மற்றொருவர் குறிப்பிட, மேலும் பலர் மணமகனை பலரும் நல்லவர் என்று குறிப்பிட்டு, இது நெகிழ்ச்சி வீடியோ என்று பதிவிட்டு வருகின்றனர்.