உக்ரைனில் ஒரு மாத போர் நிறுத்தம்... முன்மொழிந்த பிரான்ஸ், பிரித்தானியா
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஒரு மாத போர் நிறுத்தம் வேண்டும் என பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய இராணுவம்
ஆனால், அது தரைவழி சண்டையை உள்ளடக்காது என்றும் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார். மின்சாரக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மற்றும் வான் வழியாகவும் கடலில் தாக்குதல் நடத்துவதில் இருந்து ஒரு மாத காலம் போர் நிறுத்தம் தேவை என்றே மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரான்ஸ் -பிரித்தானியாத் திட்டத்தின் கீழ், ஐரோப்பிய இராணுவம் உக்ரைனுக்கு இரண்டாம் கட்டத்தில் மட்டுமே அனுப்பப்படும் என்று மேக்ரான் கூறியுள்ளார். வரும் வாரங்களில் உக்ரைன் மண்ணில் ஐரோப்பிய இராணுவம் களமிறக்கப்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் இந்த நேரத்தை எப்படிப் பயன்படுத்தி ஒரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறோம் என்பதுடன், பேச்சுவார்த்தைகள் முடிய பல வாரங்கள் ஆகலாம், அதன் பின்னர், போர் நிறுத்தம் கையெழுத்தானவுடன், உக்ரைனில் இராணுவம் அனுப்பப்படும் என்றார்.
வெள்ளை மாளிகையில் இருந்து ட்ரம்ப் மற்றும் வான்ஸ் ஆகியோரால் கடும் கருத்து மோதலுக்குப் பிறகு ஜெலென்ஸ்கி வெளியேற்றப்பட்டதன் பின்னர் இரண்டு நாட்கலுக்குப் பின்னர் லண்டனில் முக்கியமான தலைவர்களின் சந்திப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பல தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவளித்துள்ளதுடன் மேலதிக உதவிகள் செய்ய இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர்.
இதனிடையே, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் திட்டம் குறித்து ஜெலென்ஸ்கியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, தமக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவே அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |