ஒரே நாடு, ஒரே தேர்தல்- திட்டத்திற்கு எதிராக இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
2024ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.
அன்றைய தினம், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் தகவல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இருப்பதாக குறிப்பிட்டு உரையை வாசிக்காமல் அமர்ந்தார்.
மேலும் சட்டப்பேரவை தொடங்கும் முன்பாகவும், முடியும் முன்பாகவும் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தன்னுடைய வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு உரிய மரியாதை தரப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசிக்க, சில கருத்துகளை முன்வைத்ததும் ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது, இந்நிலையில் நேற்றைய நிகழ்வில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ”ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி இன்று தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
இதனை முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்மொழிகிறார், எம்எல்ஏ-க்களின் விவாதமும் நடைபெறும்.