நாயைப்போல... சொந்த பிள்ளைகளை படுகொலை செய்து உயிர் விட்ட ஐ.எஸ் தலைவர்: வெளிவராத தகவல்
சிரியாவில் ஐ.எஸ் தலைவர் அல்-பாக்தாதி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தமது சொந்த பிள்ளைகளையும் சுட்டுக்கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது.
சிரியாவில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ் தலைவர் அல்-பாக்தாதி சுற்றிவளைத்த அமெரிக்க சிறப்புப்படைகளிடம் இருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொண்டார்.
ரஷ்யா மற்றும் சிரியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் பதுங்கியிருந்த அல் பாக்தாதியை 8 ஹெலிகொப்டர்களில் மொத்தம் 70 சிறப்புப்படையினர் சுற்றி வளைத்தனர்.
சிறப்புப்படையினர் சுரங்கத்திற்குள் புகுந்து அல் பாக்தாதியை தேட, அவர் ரகசியமாக தமது பிள்ளைகளுடன் இன்னொரு பாதையில் தப்பியுள்ளார்.
இதனையடுத்து வேட்டை நாய் ஒன்றின் உதவியுடன், அல் பாக்தாதியை அமெரிக்க சிறப்புப்படையினர் தேடியுள்ளனர். இந்த நிலையிலேயே தமது பிள்ளைகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, அல் பாக்தாதி தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக, சிறப்புப்படையினருக்கு உயிர் அபாயம் ஏற்படவில்லை எனவும், காயங்களுடன் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து 11 சிறார்கள் உட்பட பலரை அந்த சுரங்கத்தில் இருந்து அமெரிக்க படைகள் மீட்டுள்ளனர். பாக்தாதியுடன் சென்ற இருவர் மட்டுமே, அவரது துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே, அல் பாக்தாதி ஒரு நாயைப்போல செத்துப் போனதாக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.