சென்னையில் ஐபிஎல் பார்த்த போது விபத்து - ஒருவர் உயிரிழப்பு; 34 பேர் காயம்
சென்னையில் ஐபிஎல் பார்த்த போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளர்.
ஐபிஎல் பார்த்த போது விபத்து
நேற்று 2026 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.

சென்னை ராமாபுரம் சாந்தி நகர் பிரதான சாலையில் மெட்ரோ பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் சுமார் 2000 பேர் இரும்பு ஷெட் போடப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு சுமார் 35 தொழிலாளர்கள் ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சியில் ஐபிஎல் இறுதிப்போட்டியை பார்த்துக்கொண்டிருந்த போது, சரியாக 12 மணியளவில் இரும்பு மேற்கூரை சரிந்து அவர்கள் மீது விழுந்தது.
இது குறித்து உடனடியாக அங்கிருந்தவர்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவர்களை மீட்டு கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 52 வயதான பிரிஞ்சு மான்சி என்ற நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் ஷெட் அமைத்த ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |