One Pot Chicken Rice: நாவூறும் சுவையில் சிக்கன் ரைஸ்: 30 நிமிடம் போதும்
இனி வீட்டில் சிக்கன் எடுத்தால் இந்த One Pot சிக்கன் ரைஸ் செய்து சாப்பிட்டு பாருங்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த One Pot சிக்கன் ரைஸை விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவாயில் One Pot சிக்கன் ரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன்- ½ kg
- காஸ்மீரி மிளகாய் தூள்- 1½ ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
- கொத்தமல்லி- சிறிதளவு
- நெய்- 1 ஸ்பூன்
- சீரக சம்பா அரிசி- 1 கப்
- தேங்காய்- 1
- வெங்காயம்- 3
- பச்சை மிளகாய்- 8
- சோம்பு- ½ ஸ்பூன்
- பட்டை- 1 துண்டு
- ஏலக்காய்- 2
- கிராம்பு- 4
- பிரிஞ்சி இலை- 1
- கறிவேப்பிலை- 1 கொத்து
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பவுலில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன், காஸ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், கொத்தமல்லி, உப்பு, நெய் சேர்த்து கலந்து ஊறவைக்கவும்.
பின் சீரக சம்பா அரிசியை 2-3 முறை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊறவைக்கவும்.
அடுத்து தேங்காயை தண்ணீர் ஊற்றி அரைத்து தேங்காய்ப்பால் எடுத்துவைத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் ஊறவைத்த சிக்கனை நன்கு சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி 80% வெந்ததும் அதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின் அதே எண்ணெயில் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை இவற்றை சேர்த்து பொரிந்ததும் பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதன் பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் சேர்த்து வதக்கவும்.
பின் அதில் ஊறவைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்து கலந்து அதில் ஒரு கப் தேங்காய்ப்பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
அரிசி 90% வெந்து வந்ததும் அதன் மேல் பொரித்த சிக்கன் சேர்த்து மூடி 10 நிமிடம் தம் போட்டு இறக்கினால் சுவையான One Pot Chicken Rice தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |