இந்தியாவில் புதிய OnePlus 10 Pro 5G அறிமுகம்!
OnePlus 10 Pro 5G மார்ச் 31 அன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் இன்று அதிகாரபூர்வாமாக அறிவித்துள்ளது.
வெளியீட்டு நிகழ்வு இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனம் அதே நாளில் இந்தியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் OnePlus Buds Pro ரேடியன்ட் சில்வர் பதிப்பை அறிமுகப்படுத்துகிறது.
Snapdragon 8 Gen 1 SoC மூலம் இயங்கும் OnePlus 10 Pro இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகமானது. மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ, கேலக்ஸி எஸ்22 சீரிஸ் மற்றும் iQOO 9 ப்ரோ போன்ற பல்வேறு ஆண்ட்ராய்டு போன்களுடன் இந்த போன் போட்டியிடும். சாஃப்ட்வேர் அனுபவத்தைத் தவிர, இந்திய மாடலில் சீனா-குறிப்பிட்ட மாதிரியின் அதே விவரக்குறிப்புகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
OnePlus சீனாவை சேர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் செல்போன்களுக்கு இந்தியா மட்டுமின்றி உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது.
Oneplus 10 pro சிறப்பம்சங்கள்:
120Hz அமோல்டு திரையை கொண்டுள்ள இந்த செல்போனில் Snapdragon 8 Gen 1 SoC உள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. நானோ சிம்கார்டுகளில் இரண்டு சிம்களை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு 12 மற்றும் கலர் ஓ.எஸ். 12.1 சாஃப்டுவர் உள்ளது. 6.7 இஞ்ச் QHD+ தொடுதிரை பொருத்தப்பட்டுள்ளது. 2.0 அமோல்டு தொடுதிரை கொண்ட இந்த மாடலில் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
8ஜிபி ராம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 32 மெகா பிக்சல் கமெராவும், பின்பக்கத்தில் 48, 50, 8, உள்ளிட்ட மெகாபிக்சலை கொண்ட மூன்று கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 5000mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. 5G, 4G LTE, Wifi 6 உள்ளிட்ட நெட்வொர்க் வசதிகளையும் கொண்டுள்ளது ஒன் பிளஸ் 10 ப்ரோ.
இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட ஒன் பிளஸ் 10 ப்ரோ மொடல் இந்த மாதம் 31-ம் திகதி விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதனால் ஒன் பிளஸ் 10 ப்ரோ மொடலுக்காக காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய மதிப்பில் இந்த செல்போன் விலை ரூ. 54,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.