OnePlus 12 series ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
OnePlus நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலான OnePlus 12 series ஸ்மார்ட்போனை அந்த நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
OnePlus 12 series
ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப நிறுவனமான ஒன்பிளஸ் தன்னுடைய புதிய மாடலான OnePlus 12 series ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
இதில் OnePlus 12 மற்றும் OnePlus 12R என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த நிறுவனத்தின் அறிவிப்பு படி, OnePlus 12 ஸ்மார்ட்போன் வரும் 30ம் திகதியும், OnePlus 12R ஸ்மார்ட்போன் பிப்ரவரி 6ம் திகதியும் விற்பனைக்கு வருகிறது.
8GB Ram+ 128GB storage வசதியுடன் வரும் OnePlus 12R ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 39,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
OnePlus 12 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14(Android 14) மற்றும் ஹைப்பர் ஓ.எஸ்(HyperOS) அம்சத்துடன் வெளியாகியுள்ளது.
அத்துடன் Qualcomm SM8550-AB Snapdragon 8 Gen 2 மற்றும் CPU: Octa-core, GPU: Adreno 740 செயல்திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
OnePlus 12R ஸ்மார்ட்போன் 128GB 8GB RAM, 256GB 16GB RAM ஆகிய 2 வேரியண்ட்டுகளில் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.
பின்பக்க பிரதான கேமரா 50MP, f/1.8, 24mm (wide), 8 MP, f/2.2, 16mm, 112˚ (ultrawide), 2 MP, f/2.4, (macro) என 3 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
16 MP, f/2.4, 26mm (wide) உடன் முன்பக்க செல்பி கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
USB Type-C 2.0, 100W சார்ஜிங் வசதியுடன் 5500 mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
கூல் புளூ மற்றும் அயர்ன் கிரே வண்ணங்களில் OnePlus 12R ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது.
OnePlus 12R ஸ்மார்ட்போனின் விலை ரூ. 39,999 மற்றும் ரூ. 45,999 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் OnePlus 12 ஸ்மார்ட்போனின் விலை (12GB+256 GB) 64,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |