அசத்தும் 7,300mAh பற்றரி திறன்: ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது பிளாக்ஷிப் மாடலான ஒன்பிளஸ் 15(OnePlus 15) ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன், சக்திவாய்ந்த snapdragon 8 Elite Gen 5SoC மூலம் இயங்கும் முதல் இந்திய ஸ்மார்ட்போன் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

சிறப்பம்சங்கள்
ஒன்பிளஸ் 15 பல்வேறு தனித்துவமான சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திரை: 6.78 இன்ச் QHD Amoled திரையை கொண்டுள்ளது.// செயல்பாடு: சக்திவாய்ந்த snapdragon 8 Elite Gen 5SoC சிப்செட் மூலம் இந்த சாதனமானது இயங்குகிறது.
ரேம் மற்றும் சேமிப்பு: 16GB வரை LPDDR5X Ultra+RAM மற்றும் 516 GB உள் சேமிப்பு வசதியை கொண்டுள்ளது.
கேமரா: 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா என மூன்று சிறப்பான கேமரா அம்சத்துடன் OnePlus 15 வெளியாகியுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
மென்பொருள்: Android 16 அடிப்படையிலான Oxygen OS 16-ல் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் இயங்குகிறது.
பற்றரி மற்றும் சார்ஜிங்: நீண்ட நேர செயல்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாக ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் 7,300mAh சிலிக்கான்-கார்பன் பற்றிரி உடன் வந்துள்ளது./// இது வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் முறைகளை ஆதரிக்கிறது.
விலை: 12GB RAM மற்றும் 256 GB ஸ்டோரேஸ் கொண்ட அடிப்படை மாடல் ஸ்மார்ட்போன் ரூ.72,990 ஆகவும், 16GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் கொண்ட உயர்ந்த மாடல் ஸ்மார்ட்போன் ரூ.79,999-க்கும் விற்பனைக்கு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |