5500 பற்றரி சக்தி, 100W சார்ஜிங் திறன்: வெறும் ரூ.29,999க்கு OnePlus Nord 4
நடுத்தர ஸ்மார்ட்போன் சந்தையில் தனது முத்திரையை பதிக்கும் நோக்கில் OnePlus நிறுவனம் சமீபத்தில் OnePlus Nord 4 போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
விலைக்கு மிஞ்சிய அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் மற்ற போன்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரை
6.74-இன்ச் அளவிலான பெரிய AMOLED திரை, FHD+ ரெசல்யூஷன் (1240 x 2772 பிக்சல்கள்) உடன் காட்சி அனுபவத்தை அசத்தலாக வழங்குகிறது.
120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்டிருப்பதால், இணையத்தில் உலாவும் போதும், கேம் விளையாடும் போதும் தடை இல்லாத அனுபவத்தை தருகிறது.
OnePlus Nord 4 Unboxing.
— Safwan AhmedMia (@SuperSaf) July 16, 2024
All metal design, Snapdragon 7 Gen 3, 5,500mAh, 4 years OS and 6 years Security Updates. From £429/€499! pic.twitter.com/4O20LZxFC8
செயல்திறன்
ஒன்பிளஸ் Nord 4 ன் இதயமாக இருப்பது பவர்ஃபுல்லான Qualcomm Snapdragon 7+ Gen 3 பிராசஸர். இந்த சிப்செட் தினசரி பணிகள், மல்டிமீடியா மற்றும் லைட் கேமிங் போன்றவற்றிற்கு சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.
கேமராக்கள்
பின்புற கேமரா அமைப்பு இரட்டை லென்ஸ் கொண்டது: ஷார்ப்பான புகைப்படங்களை எடுக்க உதவும் 50 MP பிரதான சென்சார் மற்றும் விரிந்த பகுதிகளை படம் பிடிக்கும் 8MP அல்ட்ரா-வைட் சென்சார். செல்பி பிரியர்களுக்காக 16MP முன்பக்க கேமரா உள்ளது.
OnePlus Nord 4 specifications 👉🏻
— OnePlus Club (@OnePlusClub) July 14, 2024
• 6.74" (2772×1240 px) Tianma U8+ OLED 120Hz Display
• 2150nits peak brightness
• Snapdragon 7+ Gen3
• LPDDR5X RAM; UFS 4.0 storage
• 50MP main (LYT600) OIS + 8MP UW rear camera
• 16MP Front camera
• In-display fingerprint sensor
• Stereo… pic.twitter.com/IUpNsXalnw
சேமிப்பு
அடிப்படை மாடல் 8GB LPDDR5X RAM உடன் வருகிறது, இது மல்டி டாஸ்க்கிங்கை தடையின்றி இயங்க வைக்கும்.
ஸ்டோரேஜ் விருப்பங்களில் 128GB இருக்கும், மேலும் அதிக ஸ்டோரேஜ் கொண்ட மாடல்களும் வெளிவரக்கூடும்.
பற்றரி
Nord 4 ல் இதுவரை வெளிவந்த ஒன்பிளஸ் Nord சீரிஸ் போன்களிலேயே மிகப்பெரிய பற்றரி, 5500mAh கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட் சார்ஜிங் சிஸ்டம் பேட்டரியின் ஆயுளை மேம்படுத்துகிறது மற்றும் நீண்ட நேரம் நீடிக்கும் என ஒன்ப்ளஸ் உறுதியளிக்கிறது.
100W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் இந்த போன், வேகமாக சார்ஜ் ஆகி உங்களை இயக்கத்தில் இருக்க வைக்கும்.
மென்பொருள்
OnePlus Nord 4 Android 14 ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 14.0 இயங்குகிறது.
இது சுத்தமான, பயன்படுத்துவதற்கு எளிமையான அனுபவத்தையும், சமீபத்திய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளையும் வழங்குகிறது.
விலை
இந்தியாவில், ஒன்பிளஸ் Nord 4 ₹29,999 என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது. இது 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடலின் விலையாகும்.
8GB RAM + 256GB ஸ்டோரேஜ் மாடல் ₹32,999க்கும், 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் மாடல் ₹35,999க்கும் விற்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ₹3,000 வரையிலான தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |