அதிரடியாக உயரும் வெங்காய விலை.., இந்திய அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை
வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்திய அரசு முடிவு
சமையலில் முக்கிய பொருளாக இருக்கும் வெங்காயத்தின் விலை இந்தியா முழுவதும் தற்போது அதிகளவில் உயர்ந்துள்ளது.
அந்தவகையில், தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.70க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் வெங்காய விலை கிலோவுக்கு ரூ.67 என்ற அளவில் உள்ளது.
தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் வெங்காயத்தின் தேவை அதிகளவில் இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கொள்முதல் நிலையங்களில் வெங்காயத்தின் விலை உயர்வது மட்டுமல்லாமல் சில்லறை விற்பனை நிலையங்களிலும் உயர்ந்துள்ளது.
இதனால், வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கி உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், "வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது தற்காலிகமானது தான். விலை உயரக்கூடாது என்ற காரணத்தால் இருப்பில் உள்ள வெங்காயத்தை விடுவிக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.
எந்த இடங்களில் வெங்காயத்தின் விலை உயரும் என்று கணிக்கப்படுகிறதோ அந்த இடங்களுக்கு முதல்கட்டமாக ரயில், சாலை மார்க்கமாக உடனடியாக வெங்காயம் அனுப்பி வைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் இந்த முடிவால் வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |