விண்ணை தொடும் அளவுக்கு வெங்காயத்தின் விலை: அடுத்த ஆண்டு தான் குறையுமா?
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை வரும் எனக் கூறப்படுகிறது.
வெங்காயம் விலை உயர்வு
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இப்போது இருந்தே புலம்பி வருகின்றனர். நவராத்திரி கொண்டாட்டத்திற்கு பிறகு வெங்காயத்தில் விலை உயர்ந்து கொன்டே வருகிறது.
இந்திய தலைநகர் டெல்லி சந்தையில் நேற்று வெங்காயத்தின் விலை ஒரு கிலோவுக்கு 90 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கூடிய விரைவில் ஒரு கிலோவுக்கு ரூ.100-க்கு விற்பனையாகும் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே, நாள் ஒன்றுக்கு வெங்காயத்தின் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை உயருகிறது. இதனால், டெல்லி மக்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.20 -க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதுபோல, கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.110 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
விலை எப்போது குறையும்?
கர்நாடகா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மழை இல்லாததால் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை உயர்ந்தது போல தற்போது வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
வெங்காயத்தின் விலை அடுத்த இரண்டு அல்லது இரண்டரை மாதங்கள் வரை குறைவதற்கு வாய்ப்பில்லை எனவும், அடுத்த ஆண்டு ஜனவரி 15 -க்கு பிறகு தான் விலை குறையும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |