மொறு மொறு டீ கடை வெங்காய சமோசா: எப்படி செய்வது?
சமோசா என்பது அனைத்து டீ கடைகளிலும் இருக்கும் மிகவும் பிரபலமான உணவும்.
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி உண்பார்கள்.
அந்தவகையில், மொறு மொறு டீ கடை வெங்காய சமோசா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா- 2 கப்
- உப்பு- சிறிதளவு
- வெங்காயம்- 2
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- கரம் மசாலா- ½ ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- சோம்பு- ½ ஸ்பூன்
- சீரகம்- ½ ஸ்பூன்
- கறிவேப்பிலை- சிறிதளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மென்மையாக பிணைந்து 30 நிமிடம் அப்படியே வைத்துக்கொள்ளவும்.
பின் இதை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி சப்பாத்தி மா போல் தேய்த்து 30 வினாடிகள் போல தவாவில் சுட்டு எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதை அனைத்தையும் ஒன்றாக வைத்து ஓரங்களை நறுக்கி செவ்வக வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
இதைத்தொடர்ந்து வெட்டிவைத்த சப்பாத்தியை முக்கோண வடிவில் மடித்து அதற்குள் கலந்து வைத்து வெங்காயத்தை வைத்து மடித்து ஓரங்களால் மைதா பயன்படுத்தி ஒட்டவும்.
இறுதியாக வாணலில் எண்ணெய் வைத்து சூடானதும் சமோசாவை பொறித்து எடுத்தால் மொறு மொறு டீ கடை சமோசா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |