சுவிஸ் நாட்டவர் ஒன்லைனில் ஆர்டர் செய்த பொருளால் சிக்கல்: ஒரு எச்சரிக்கை செய்தி
சுவிட்சர்லாந்தில், ஒன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஒன்லைனில் அரசியல்வாதி ஆர்டர் செய்த பொருள்
சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்திலுள்ள Buchs நகரின் கவுன்சிலர், சீன இணையதளம் ஒன்றில், இரண்டு water pistolகளை ஆர்டர் செய்துள்ளார்.
அவை இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தாலும், உண்மையான பிஸ்டல்கள் போலவே இருந்துள்ளன.
ஆகவே, அந்த கவுன்சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, Bernஇல் வாழும் பெண்ணொருவர், மர்மப் பெட்டி என விளம்பரம் செய்யப்பட்டிருந்த ஒரு பெட்டியை ஆர்டர் செய்துள்ளார்.
அந்தப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பது அவருக்குத் தெரியாது.
உண்மையில் பெட்டிக்குள் இருந்ததோ, ஒரு கத்தி, பொலிசார் பயன்படுத்தும் லத்தி மற்றும் பெப்பர் ஸ்பிரே!
அப்புறம் என்ன? அவருக்கும் அபராதம் விதித்துள்ளார்கள் அதிகாரிகள்...
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |