10-ல் ஒருவர் மட்டுமே ஆதரவு: அமெரிக்கா மீதான நம்பிக்கையை இழந்த ஐரோப்பியர்கள்
அமெரிக்கா மீதான ஐரோப்பியர்களின் நம்பிக்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக குறைந்து இருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தகவல் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மீதான நம்பிக்கை சரிவு
ஐரோப்பிய வெளியுறவு கவுன்சில்(ECFR) நடத்திய சமீபத்திய ஆய்வில், அமெரிக்காவை நம்பகமான கூட்டாளியாக வெறும் 11% ஐரோப்பியர்கள் மட்டுமே நம்புவதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்கா மீதான ஐரோப்பியர்களின் நம்பிக்கை 6 மாதங்களுக்கு முன்பு 16% ஆகவும், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2024 நம்பவரில் 22% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நேட்டோவில் இருந்து விலகுவது தொடர்பான அறிவிப்பு, கிரீன்லாந்தை கைப்பற்றும் முயற்சி போன்ற டிரம்ப் நிர்வாகத்தின் சில கொள்கை மற்றும் நடவடிக்கைகள் தான் ஐரோப்பிய நாடுகள் இடையே இந்த மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
புதிய பாதுகாப்பு வியூகம்
அமெரிக்கா நேட்டோ அமைப்பில் இருந்து விலகுவதாக அச்சுறுத்தி வரும் நிலையில், அமெரிக்கா மீதான நம்பிக்கையை பாதுகாப்பு விவகாரத்தில் ஐரோப்பியர்கள் பெருமளவு இழந்துள்ளனர்.

இதனால் ஐரோப்பிய மக்கள் தங்களது பாதுகாப்பிற்கான சொந்த வியூகங்களை வேகமாக திட்டமிட்டு வருகின்றனர்.
ஐரோப்பாவின் பாதுகாப்பை அதிகரிக்க கடந்த ஆண்டை விட 4% பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதற்கான ஆதரவு அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் திட்டங்களுக்கான கூட்டு நிதி பங்களிப்பை 47 சதவீத மக்கள் ஆதரவளித்துள்ளனர்.
அதே சமயம் அமெரிக்காவிடம் இருந்து இராணுவ தளவாடங்களை வாங்குவதற்கு பதிலாக ஐரோப்பாவிலேயே ராணுவ உபகரணங்களை தயாரிக்க ஐரோப்பிய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |