உலக அளவில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு: OECD அமைப்பின் புதிய அறிக்கை!
உலகமெங்கும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான அளவே மறுசுழற்சி செய்யப்படுவதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் புதிய அறிக்கையின்படி கடந்த ஆண்டு மட்டும் சுமார் 460 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது முந்தய 2000மாவது ஆண்டுடன் ஒப்பிட்டால் இந்த அளவானது இரண்டுமடங்கு அதிகரித்து இருப்பதாக OECD தெரிவித்துள்ளது. இவ்வாறு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் மறுசுழற்சி விகிதத்தை எடுத்துக்கொண்டால் 100ல், 10 சதவிகிதத்திற்கும் குறைவான பிளாஸ்டிக் பொருள்களே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
Only 9% of plastic recycled worldwide: OECD.
— AFP News Agency (@AFP) February 24, 2022
Organisation for Economic Co-operation and Development report found that 460 million tonnes of plastics were used in 2019, the number nearly doubling since 2000https://t.co/WSv3Hmn1V3 pic.twitter.com/e6yOR9uBpP
மறுசுழற்சி செய்யப்பட்டது போக மீதம் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் 19 சதவிகிதம் எரிக்கப்படுவதாகவும், 50 சதவிகிதம் சுகாதார நிலப்பரப்புகளுக்குச் கொண்டுசெல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீதமுள்ள 22 சதவிகித பிளாஸ்டிக் பொருள்கள் கட்டுப்பாடற்ற குப்பைத்தொட்டிகள் மற்றும் திறந்தவெளிகளில் போடப்பட்டு சுற்றுசுழலுடன் கலப்பதாக OECD தெரிவித்துள்ளது.
ஆனால் கொரோனா பரவல் காலகட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு 2.2 சதவிகிதம் குறைந்து இருந்தாலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் அளவு அதிகரிக்கவே செய்துள்ளதாக OECD தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பரவலான புவி வெப்பமடைதல் மற்றும் மாசுபாட்டின் முகத்தில்,உலகநாடுகள் ஒருங்கிணைந்த மற்றும் உலகளாவிய தீர்வுகளுடன் பதிலளிப்பது மிகவும் முக்கியமானது என்று OECD பொதுச்செயலாளர் மத்தியாஸ் கோர்மன் அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.