உயிர் பயத்தால் ஊரை காலி செய்த மக்கள்? ஒரே ஒருவர் மட்டும் வசிக்கும் தமிழ்நாட்டு கிராமம்
தமிழ்நாட்டின் கிராமம் ஒன்றில் ஒருவர் மட்டும் வசித்து வருகிறார்.
நாட்டக்குடி கிராமம்
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் நாட்டக்குடி கிராமம் உள்ளது. முன்னதாக இந்த கிராமத்தில் 5000 பேர் வசித்து வந்த நிலையில், தற்போது ஒரே ஒருவர் மட்டுமே வசித்து வருகிறார்.
மதுரை சாலை இணைப்பில் இருந்து சுமார் 3 கிமீ தூரத்தில் உள்ள இந்த கிராமத்தில் போதிய குடிநீர் மற்றும் சாலை, பஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் படிப்படியாக ஏராளமானோர் வெளியேறினர்.
இதன் காரணமாக இங்குள்ள இளைஞர்களுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. மேலும், வேலை தேடி பலரும் இங்கிருந்து வெளியேற தொடங்கினர்.
முன்னதாக விவசாயி ஒருவர் மற்றும் கடந்த மாதத்தில் முதியவர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து எஞ்சியிருந்தவர்களும் இந்த கிராமத்தை விட்டு வெளியே சென்றுள்ளனர்.
தற்போது தங்கராசு என்ற முதியவர் மட்டும் அந்த கிராமத்தில் வசித்து வருகிறார். தனது உயிர் உள்ளவரை இந்த கிராமத்தில் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை விமர்சனம்
இது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வீடியோ உடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில், "ஒரு காலத்தில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்த சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டாக்குடி கிராமம் இப்போது ஒரு பேய் கிராமமாக மாறிவிட்டது. அங்கு ஒரே ஒரு ஆன்மா மட்டுமே எஞ்சியுள்ளது.
Once home to over 5,000 people, the village of Naatakudi in Sivagangai district has now become a ghost village, with just one soul left behind. Thiru @mkstalin, while your attention remains fixated on matters far removed from the lives of ordinary Tamilians, this village is a… pic.twitter.com/BapgGJyb6e
— K.Annamalai (@annamalai_k) August 5, 2025
முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனம் சாதாரண தமிழர்களின் வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவில் உள்ள விஷயங்களில் நிலைத்திருக்கும் அதே வேளையில், இந்த கிராமம் உங்கள் கண்காணிப்பின் கீழ் நிர்வாக அலட்சியத்தின் வெளிப்படையான அடையாளமாகும்.
இந்த கிராம மக்கள் நீண்ட காலமாக சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து புகார் அளித்து வருகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, கிராமத்தில் சமீபத்தில் நடந்த கொலைகள் முழு சமூகத்தையும் விரக்தியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில், மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷனின் கீழ் ரூ.4,835 கோடிக்கு மேல் தமிழகத்திற்கு வழங்கியுள்ளது, ஆனால் குழாய் நீர் அணுகலுக்காக போராடும் கிராமங்கள் இன்னும் உள்ளன.
நாட்டக்குடி கிராமத்தை உள்ளடக்கிய சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உள்ள மாத்தூர் கிராம பஞ்சாயத்து அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குழாய் நீர் இணைப்பை அடைந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது நிர்வாகத் தோல்வி மட்டுமல்ல; இது துரோகம். இதுதான் தமிழகத்தின் பரிதாப நிலை" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |