பிரித்தானியாவும் ரஷ்யாவும் கைகோர்த்தால்தான் புதுவகை கொரோனா வைரஸ்களை ஒழிக்க முடியுமாம்!
பிரித்தானியாவும் ரஷ்யாவும் கைகோர்த்தால்தான் புதுவகை கொரோனா வைரஸ்களை ஒழித்துக் கட்ட முடியும் என்கிறார் ரஷ்ய ஆய்வாளர் ஒருவர்.
அதாவது, பிரித்தானிய தயாரிப்பான ஆக்ஸ்போர்டு தடுப்பூசியையும், ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசியையும் சேர்த்து ஒருவருக்கு செலுத்தினால், புதுவகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கலாம் என ரஷ்ய ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று வெளியான ஸ்புட்னிக் தடுப்பூசியின் ஆய்வுகள், இரண்டு டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசி கொடுக்கப்பட்டால், அது 92 சதவிகிதம் திறன்வாய்ந்ததாக உள்ளதாக தெரிவிக்கின்றன.
அத்துடன், 16,500 பேருக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி கொடுக்கப்பட்டபோது, அவர்களில் 16 பேருக்கு மட்டுமே அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை, சொல்லப்போனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டிய நிலைமை கூட ஏற்படவில்லை.
இந்நிலையில், ஸ்புட்னிக் தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியுடன் இணைத்து கொடுக்கும்போது நல்ல பலன் கிடைக்கலாம் என்று கூறியுள்ளார் Kirill Dmitriev என்ற ரஷ்ய ஆய்வாளர்.
ஸ்புட்னிக் தடுப்பூசியையும் ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியையும் இணைத்து கொடுத்து, அதன் செயல்திறனை நிரூபித்தபின் இதுகுறித்து பிரித்தானியாவுடன் பேச இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.