”ட்விட்டர் வாக்கெடுப்பில் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் மட்டுமே வாக்களிக்க முடியும்” எலான் மஸ்க்
ஏப்ரல் 15 ஆம் தேதி ட்விட்டரில் தொடங்கப்படும் வாக்கெடுப்பில் சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் கணக்குகள் மட்டுமே வாக்களிக்க தகுதி பெறும் என்று எலோன் மஸ்க்(elon musk) கூறியுள்ளார்.
ட்விட்டரின் புதிய மாற்றங்கள்
ட்விட்டரின் தலைமை நிர்வாகியான எலான் மஸ்க் தொடர்ந்து ட்விட்டர் பக்கங்களில் பல மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக அதிக பாலோயர்ஸ் கொண்டவர்கள் அனைவரும் சந்தாதாரர் ஆக வேண்டும் என கூறியிருந்தார்.
@getty images
மேலும் ட்விட்டர் புளூ சந்தா அமலுக்கு வரும் முன் தங்களின் கணக்குகளை வெரிஃபைடு செய்து புளூ டிக் (blue tick) பெற்றவர்களுக்கு புளூ டிக் நீக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது.
ட்விட்டர் வாக்கெடுப்பு
ஏப்ரல் 15 ஆம் தேதி ட்விட்டரில் தொடங்கப்படும் வாக்கெடுப்பில் சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் கணக்குகள் மட்டுமே வாக்களிக்க தகுதி பெறும் என்று எலோன் மஸ்க் கூறியுள்ளார்.
@reuters
சரிபார்க்கப்பட்ட கணக்குகள்(verified accounts) மட்டுமே ட்விட்டரின் அவர்களுக்கான பரிந்துரைகளில் இருக்கத் தகுதிபெறும் என்றும் மஸ்க் கூறியுள்ளார். இது மேம்பட்ட AI போட் திரள்களை நிவர்த்தி செய்யும் என்று சமூக ஊடக நிறுவனத்தின் தலைமை அமைப்பு உறுதியளித்துள்ளது.
Starting April 15th, only verified accounts will be eligible to be in For You recommendations.
— Elon Musk (@elonmusk) March 27, 2023
The is the only realistic way to address advanced AI bot swarms taking over. It is otherwise a hopeless losing battle.
Voting in polls will require verification for same reason.
இது ட்விட்டரில் உள்ள கணக்குகளின் ட்வீட்களின் ஸ்ட்ரீமையை(stream) குறிக்கிறது. கருத்துக்களை பதிவிடுவதற்கான ராய்ட்டர்ஸின் கோரிக்கைக்கு ட்விட்டர் உடனடியாக பதிலளிக்கவில்லை.