பிரான்ஸ் முடிவால் மீண்டும் சிக்கலில் ஜோகோவிச்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை இனி நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என பிரான்ஸ் அறிவித்துள்ள நிலையில், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத காரணத்தால் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கமுடியவில்லை. இதனால் ஜோகோவிச் விசா ரத்து செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவிற்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்டார்.
இதனையடுத்து அவரது ஆஸ்திரேலிய ஓபன் கனவு தகர்ந்தது. தொடர்ந்து துபாய் வழியாக அவர் சொந்த நாடானா செர்பியாவுக்கு திரும்பினார். இந்த நிலையில் பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டும் எதிர்வரும் பிரெஞ்ச் ஓபனில் அவரை பங்கேற்க அனுமதிப்போம்.
எங்கள் நாட்டில் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருப்பர்களுக்கு மட்டுமே பொதுஇடங்களில் அனுமதி அளிப்பது என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகின் நம்பர் 1 வீரர் என்பதற்காக அவருக்கு எந்த வித சலுகையும் காட்டமுடியாது.
இவ்வாறு பிரான்ஸ் விளையாட்டுத்றை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதே முடிவை தற்போதைய சூழலில் எஞ்சிய நாடுகளும் முன்னெடுத்தால், தடுப்பூசி மறுப்பாளரான ஜோகோவிச் தமது டென்னிஸ் வாழ்க்கையை கைவிடும் நிலைக்கு தள்ளப்படலாம் என கூறப்படுகிறது.