வெளியானது ChatGPT ஆண்ட்ராய்டு செயலி! அசத்தல் செய்தி வெளியிட்ட OpenAI
OpenAI நிறுவனம் தங்களது Chat GPT ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ChatGPT 3.5
OpenAI தொழில்நுட்ப நிறுவனம் தங்களது செயற்கை நுண்ணறிவு ChatGPT 3.5 பாட்-ஐ உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இந்த Chat GPT 3.5 வெர்ஷன் ஆனது முந்தைய Chat GPT-3 வெர்சனில் இருந்து மேம்படுத்தப்பட்டது ஆகும்.
இது உலக அளவில் உள்ள அனைத்து டேட்டாபேஸ்களில் இருக்கும் தகவல்களையும் உள்ளடக்கி வைத்து இருப்பதால், மனிதர்களை போன்று குறிப்பிடத்தக்க துல்லியத்தன்மை உடன் உரையாடலை புரிந்து கொண்டு பதில் உரையை நடத்தும் மொழி மாதிரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AFP
சில நேரங்களில் இந்த சாட்பாட் ஆனது மனிதர்களை விடவும் வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் உரையாடல்களை நடத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பாக சொல்லப்படுகிறது.
ChatGPT ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம்
ஆனால் இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் பயனர்கள் வெப் பிரவுசர்களை நாடி இருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் OpenAI தொழில்நுட்ப நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பில்லியன் கணக்கான பயனர்களுக்கு ChatGPT எளிதாக அணுகக்கூடிய அம்சமாக மாறியுள்ளது.
Announcing ChatGPT for Android! The app will be rolling out to users next week, and you can pre-order in the Google Play Store starting today: https://t.co/NfBDYZR5GI
— OpenAI (@OpenAI) July 21, 2023
இது தொடர்பாக OpenAI நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் டாக்டர் எமிலி வோங் தெரிவித்துள்ள கருத்தில், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த GPT-3.5 ஐ அறிமுகம் செய்து வைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் GPT-3.5-யின் மேம்படுத்தப்பட்ட புரிதல் மற்றும் பல்நோக்கு திறன் டிஜிட்டல் துறையின் புதிய சாத்தியங்களை சிறந்ததாகவும் சுவாரஸ்யமாகவும் ஆக்கும் என்று தெரிவித்துள்ளார்.
iOS பயனர்களால் மாதம் ரூ. 1,999 சந்தா செலுத்தி Chat GPT Plus அம்சங்களில் சேர முடியும், ஆண்ட்ராய்டு பயனர்களால் இந்த சந்தா திட்டத்தில் தற்போதைக்கு சேர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |