நெருங்கிய நண்பரை கரம் பிடித்தார் பிரபல OpenAI நிறுவனத்தின் CEO.. வைரலாகும் புகைப்படங்கள்
ஓப்பன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சிஇஓவான சாம் ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
OpenAI CEO திருமணம்
OpenAI நிறுவனத்தின் சிஇஓவாக சாம் ஆல்ட்மேன் செயல்பட்டு வருகிறார். இவர் அண்மையில் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தனது நெருங்கிய நண்பரான ஆலிவர் முல்ஹெரினை மோதிரம் மாற்றி ஆல்ட்மேன் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஹவாயில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. தற்போது, திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
யார் இந்த Oliver Mulherin?
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் Oliver Mulherin. இவர் பொறியியல் படிப்பு முடித்துள்ளார். Meta, Broadwing, SPARK Neuro மற்றும் IOTA Foundation ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய இவர், தற்போது ஐஓடி எனும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறையில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.
திருமண புகைப்படங்களை Oliver Mulherin தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், என் சிறந்த நண்பரையும், என் வாழ்க்கையின் காதலையும் திருமணம் செய்து கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |